ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார்

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து செயற்பட்டு வருகின்றன.
 | 

ஜப்பான்  வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார்


ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாரோ கொனோ (Taro Kono) வருகிற 5ம் தேதி இலங்கைக்கு வருகிறார்.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து செயல்பட்டு வருகின்றன. இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் அதிக உதவிகளை செய்து வரும் நாடுகளில்  ஜப்பான்  முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கொனோ வருகிற 5ம் தேதி இலங்கைக்கு வருகிறார். டாரோ கொனோ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுடன் உடன் பேச்சுவாத்தை நடத்த உள்ளார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஓருவர் இலங்கைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP