இங்கிலாந்து அரச குடும்பத்தை வரவேற்கக் குழுவா? இலங்கை மறுப்பு

இங்கிலாந்து அரச குடும்பத்தினரை வரவேற்கக் குழு அமைக்கப்பட்டதாகவும், அது சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் வரும் தகவல் போலியானது.
 | 

இங்கிலாந்து அரச குடும்பத்தை வரவேற்கக் குழுவா? இலங்கை மறுப்பு

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் வந்திருக்கிறார். அவரை வரவேற்க நல்வரவு செயற்குழு என்று ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அது 18 வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு படம் உலாவி வருகிறது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. 

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து உயர் ஆணையரகம் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், "இங்கிலாந்து அரச குடும்பத்தினரை வரவேற்கக் குழு அமைக்கப்பட்டதாகவும், அது சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் வரும் தகவல் போலியானது. இதுபோன்ற வரவேற்பு குழுவை அரசு அமைக்கவே இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP