தமிழர் பகுதியில் முதலீடு! இந்தோனேசியாவுக்கு சம்பந்தன் வேண்டுகோள்

“வடக்கு, கிழக்கில் முதலீடுகளை செய்ய வேண்டும்”இந்தோனேசியாவிடம் சம்பந்தன் வேண்டுகோள்
 | 

தமிழர் பகுதியில் முதலீடு! இந்தோனேசியாவுக்கு சம்பந்தன் வேண்டுகோள்


இலங்கைப் போரில் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் எதிர்க்கட்சி இரா. சம்பந்தன் ஆகியோருக்கிடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன் போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. நீண்டகால போர் காரணமாக பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மிகவும் பின்தங்கி உள்ளது. இந்நிலையை சீர்செய்வதற்கு சர்வதேசத்தின் உதவி தேவைப்படுகின்றது'' என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய அதிபர் கூறுகையில், "இலங்கையை வளர்ச்சி பெற செய்யும் முயற்சிகளுக்கு இந்தோனேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்கும் உதவிகள் வழங்கப்படும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP