உடல் உறுப்பு தானம் வழங்குவதில் புதிய முறை அறிமுகம்

இலங்கையில் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் புதிய முறை அறிமுகம்
 | 

உடல் உறுப்பு தானம் வழங்குவதில் புதிய முறை அறிமுகம்


உடல் உறுப்பு தானமாக வழங்கும் புதிய முறை இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிறிஜயவர்த்தனபுர மருத்துவமனையின் சிறுநீரக நோய் மருத்துவர் சிந்தக கலஹிட்டியாவ இது குறித்து தெரிவிக்கையில், “உடல் உறுப்பு தானம் இலங்கைக்கு புதிதாக இருந்த போதிலும் உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வோரின் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 18ம் தேதி நினைவு கூறப்படும்.

அடுத்த மாதம் 18ம் தேதி உடல் உறுப்பு தானமாக வழங்குவது குறித்து தெளிவுபடுத்துவதற்கான அமைப்பு ஒழுங்கு செய்துள்ள நடை பயணம் ஒன்று பத்தரமுல்ல நாடாளுமன்றத்தில் இருந்து சிறிஜயவர்த்தனபுர மருத்துவமனை வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

தமது உடல் உறுப்பை தானமாக வழங்க விரும்புவோர் அன்றைய தினம் அதற்கான பதிவுகளை செய்து கொள்ள முடியும். மேலும் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தேவைப் படுவோருக்கு அவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP