இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்து உத்தரவிட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அதிபரின் உத்தரவின் மீது டிசம்பர் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தல்களை நடத்தவும் உத்தரவிட்டார். 

அதிபரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் மீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு, அதிபரின் நடவடிக்கைகள் மீது இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனவின் உத்தரவின் மீது டிசம்பர் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளனர். அதேபோல, ஜனவரி 5ம் தேதி புதிய தேர்தல்கள் நடத்த சிறிசேனா விதித்த அரசாணை மீதும், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP