காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி

இலங்கையின் காங்கேசன்துறை, துறைமுக வளர்ச்சிக்கு இந்தியா 6.9 பில்லியன் உதவி
 | 

காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி


இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகத்தின் வளர்ச்சிக்காக 69,652 கோடி ரூபாய் நிதி உதவியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இலங்கையின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் ஒன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அப்போது, இந்திய ஏற்றுமதி வங்கியின் நிர்வாக இயக்குநர் டேவிட் ரஸ்குன்கா மற்றும் இலங்கை நிதிதுறை செயலாளர் ஆர்.எச்.எஸ்ச.மரதுங்கா இடையே காங்கேசன் துறை வளர்ச்சித் திட்டத்துக்காக இந்தியா நிதி உதவி அளிப்பது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. துறைமுக வளர்ச்சிக்காக இந்தியா ரூ.69,652 கோடி ரூபாய் வழங்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த நிதி தற்போது இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைத்து இலங்கையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியின் மூலம், காங்கேசன்துறை துறைமுகம் அனைத்து வசதிகளையும் கொண்ட வர்த்தக துறைமுகமாக வளர்ச்சி பெறும். வடக்கின் வளர்ச்சித்திட்டங்களுக்கும் இந்த துறைமுகம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP