அதிகரித்த வாள்வெட்டு... யாழ்பாணத்தில் வீதிவீதியாக போலீஸ் சோதனை!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் போலீஸாரின் சோதனைகள் ஆரம்பம்!
 | 

அதிகரித்த வாள்வெட்டு... யாழ்பாணத்தில் வீதிவீதியாக போலீஸ் சோதனை!


யாழ்ப்பாணத்தில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீசார் வீதி வீதியாகச் சென்று சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு வன்முறை சம்­ப­வங்­கள் அதிகரித்தது. இதையடுத்து சந்தேகத்தின் பெயரில்  நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

இந்நிலையில், வாள்வெட்டு சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டைப் பகுதியில் நடந்த வாள்­வெட்­டில் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்ளனர். மேலும் சில இடங்களில் வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாருக்கு புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் போலீஸார் மீண்டும் வீதிச் சோத­னை­களை ஆரம்பித்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் ஒரு வித அச்ச நிலை தோன்றியுள்ளது. அதேநேரத்தில், குற்ற சம்பங்களின் எண்ணிக்கை குறைந்தால் சரி என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP