உள்ளூராட்சி தேர்தல் முடிவு எப்படி? கலங்கி நிற்கும் ஜனாதிபதி

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று உளவுத் துறையினர் ஜனாதிபதிக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 | 

உள்ளூராட்சி தேர்தல் முடிவு எப்படி? கலங்கி நிற்கும் ஜனாதிபதி

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று உளவுத் துறையினர் ஜனாதிபதிக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. இலங்கையில் உள்ள 24 மாநகராட்சிகள், 41 நகரச் சபைகள், 276 பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 1.58 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முடிவு பற்றிய கவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்டிப்படைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று உளவுத் துறை மூலம் ஜனாதிபதி மைத்திரிபால ஆய்வு செய்திருக்கிறார். அவர்கள் தந்த அறிக்கைதான் ஜனாதிபியின் தூக்கத்தைக் கெடுத்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கியத் தேசிய கட்சியே பெறும். ஜனாதிபதியின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏழு இடங்கள் வரையில் கிடைக்கும் என்று அறிக்கை தெரிவித்திருக்கிறது. 


மேலும், மஹிந்தா ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ், இஸ்லாமிய கட்சிகள் 40-க்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றும் என்றும், ஜே.வி.பி-யால் ஒரு சபையில் கூட வெற்றி பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

காவல் துறையினர், முப்படையினர் தங்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். முப்படையினர் பொது ஜன முன்னணிக்கே அதிகம் வாக்கு அளித்துள்ளனர். காவல் துறையினரோ ஐக்கியத் தேசிய கட்சிக்கு அளித்திருக்கிறார்களாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP