ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ரோந்து: இலங்கை அதிபர்

இலங்கையில் அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.
 | 

இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்து வந்த கோத்தபய ராஜபக்சே, நேற்று துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படையினர் பொது பாதுகாப்பு சட்டத்தன் கீழ் பணியில் ஈடுபட அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, பொது அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP