இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
 | 

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!


இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என குடிவரவு குடியகல்வுத்துறை தலைவர் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 31,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமைக்கு இதுவரையில் 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 16 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட பிரஜைகள் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்வதற்கு கைவிரல் அடையாளம் தற்போது பெற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு இலங்கை பிரஜை உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தமது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு இணையத்தளத்தின் ஊடாக வசதிகள் விரைவாக செய்து கொடுக்கப்படும். நவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் இந்த ஆண்டு முதல் புதிய பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP