இலங்கையில் தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனம்

இலங்கையில் தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனம்
 | 

இலங்கையில் தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனம்


வரும் ஜனவரி 8ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தேசிய நல்லிணக்கம் வாரம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க அரசாங்கம் என தன்னை அறிவித்து மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம் கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அன்று முதல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக கூறுகின்றது. ஆனால் நல்லிணக்க முயற்சி என்று கூறி தமிழர்களின் நிலங்களில் சிங்கள மக்களை சட்டமுரணாக குடியமர்த்தி நில அபகரிப்பு செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதாக தமிழர்களினால் குற்றம்சுமத்தப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் தற்போது தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சகம், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய நல்லிணக்க வாரத்தை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கம், சமாதானத்துடன் கூடிய வலுவான உரையாடல்கள், வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை விருத்தி செய்தல், பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்தல் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP