ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆபத்தா?

அதிகளவு எச்.ஐ.வி நோய் பரவி வருகின்றது. 25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
 | 

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆபத்தா?


இலங்கையின் ஓரினச் சேர்க்கையாளர்கள் இடையே எச்.ஐ.வி நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 70 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்து எச்.ஐ.வி தடுப்பு தேசிய திட்டத்தின் இயக்குனர் சிசிர லியனகே கூறுகையில்,

“சந்தேகத்துக்குரிய 12,000 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 280 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 220 பேர் ஆண்கள். அவர்களுள் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள். இவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் குருணாகலையைச் சேர்ந்தவர்கள். 

மேலும் இந்த பகுதிகளில் எச்.ஐ.வி உட்பட தொற்று நோய்கள் பரவி வருவது அதிகமாக இருக்கின்றது.  எச்.ஐ.வி நோயை 2025ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்" என்றார்.

இலங்கையில் 7500 ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP