இலங்கை முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பதிவு- ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!

இலங்கை முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பதிவு- ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!
 | 

இலங்கை முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பதிவு- ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!


இலங்கையின் கிழக்கு மாகாண இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி முகநூலில் கருத்து பதிவிட்டு, சர்ச்சைக்குள்ளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சம்மாந்துறையைச் சேர்ந்த முகநூல் நண்பர் ஒருவருடன் மெசஞ்ஜரில் சமகால அரசியல் குறித்து விவாதிக்கும்போது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் ஷபீக் ரஜாப்தீன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தனிப்பட்ட முறையில் பேசிய விஷயத்தை, அந்த நபர் முகநூலில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ஷபீக் ரஜாப்தீன் மீதும் அவரது கட்சி மீதும் கண்டனமும் விமர்சனமும் எழுந்தன.

இந்நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முகநூல் பதிவு குறித்து ஷபீக்கிடம் விளக்கம் கேட்டார். ஆனால், எந்த ஒரு விளக்கத்தையும் தெரிவிக்காது, ஷபீக் ரஜாப்தீன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின்  துணைத் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP