இலங்கை நாடு திரும்பும் அகதி குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க கட்டணம்

இலங்கை- நாடு திரும்பும் அகதி குந்தைகளுக்கு குடியுரிமை வழங்க கட்டனம்
 | 

இலங்கை நாடு திரும்பும் அகதி குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க கட்டணம்


தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதி குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது,  பெருமளவிலான தமிழர்கள் தமிழ் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் 100கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, இலங்கையில் போர் முடிவுற்று அமைதி ஏற்பட்டுள்ளதனால் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை நாடு திரும்புமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகள் நாடு திரும்பி வருகின்றன. ஆனாலும் நாடு திரும்புபவர்கள் தொழில் வாய்ப்பு, இருப்பிடம் போன்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. அதில் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருப்பதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் சீ.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சீ.சந்திரதாஸன் மேலும் தெரிவிக்கையில், நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க, இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குடியுரிமையொன்று வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை திரும்பும் அகதிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டணமாக பெறுகின்றது.

தமது உயிரை பணயம் வைத்து, எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவிற்கு சென்று மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இவ்வாறு கட்டணம் பெறப்படுவது சட்டவிரோதமான நடவடிக்கை. இதன்படி, இலங்கைக்கு திரும்பும் அகதிகளின்குழந்தைகளுக்கு குடியுரிமையை பெற்றுக்கொள்ள கட்டணம் பெறக்கூடாது. இது குறித்து இலங்கை அமைச்சரவையில் விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் குழந்தைகளை நல்லிணக்க செயற்பாடுகளுடன் இணைந்துக் கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP