இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த சர்ச் மீண்டும் திறப்பு!

இலங்கை குண்டுவெடிப்பு நடந்த, நீர்க்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச் சீரமைமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
 | 

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த சர்ச் மீண்டும் திறப்பு!

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த, நீர்க்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச் சீரமைமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்பு உள்ளி்ட்ட பல இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த கோர சம்பவத்தில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள், தங்கள் குடும்பங்களை இழந்து மீளா துயரத்தில் உள்ளனர். 

இந்த குண்டுவெடிப்பின் போது, நீர்க்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச்சில் மக்கள் ரத்த வெள்ளத்தில் அங்குமிங்குமாக சிதறிக்கிடந்த புகைப்படங்கள் உலகையே பதைபதைக்க வைத்தன. அதன்பின்னர் இந்த சர்ச் தற்காலிகமாக மூடப்பட்டது. 

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த சர்ச் மீண்டும் திறப்பு!

தற்போது இந்த சர்ச்சானது சீரமைக்க்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சர்ச்சில் உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் வழிபாட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP