அம்மாந்தோட்டையில் சீனக் கொடி - அதிருப்தியில் இந்தியா!

அம்மாந்தோட்டையில் சீனக் கொடி - அதிருப்தியில் இந்தியா!
 | 

அம்மாந்தோட்டையில் சீனக் கொடி - அதிருப்தியில் இந்தியா!


அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தில் சீனாவின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்ள விவ­கா­ரம், இலங்­கைக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையில் ­ராஜதந்திர ரீதியில் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் கடந்த செப்­டம்­பர் மாதம் 9ம் தேதி சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு நீண்ட கால குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டது. இதையடுத்து கடந்த 1ம் தேதி மு­தல் அங்கு சீனா­வின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளது.

முன்­னர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தில் இலங்­கை­யின் தேசி­யக் கொடி­யும், துறை­முக அதிகார சபையின் கொடி­யும் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. ஏனைய கொடி­க­ளை­விட, இலங்­கை­யின் தேசியக்­கொடி சற்று உய­ர­மா­கப் பறக்­க­வி­டப் பட்­டி­ருந்­தது. தற்போது இலங்­கை­யின் தேசியக் கொடிக்கு சமமாக சீனா­வின் தேசி­யக்­கொ­டி பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா­வின் தேசி­யக் கொடி அம்பாந்தோட்டையில் ஏற்­றப்­பட்­டுள்ள விவகாரம் குறித்து இந்­திய அரசு கடும் அதி­ருப்­தி­யில் இருப்­ப­தாக கூறப்படுகிறது.

முன்னதாக அம்பாந்தோட்டை விமான நிலையம் இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருந்தது. ஆனால் இந்த திட்டத்துக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம், அம்மாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா இலங்கை மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

 திட்டத்திற்கு ராணுவ ரீதியிலான முக்கியத்துவமும் பூகோல அரசியல் ரீதியிலான முக்கியத்துவமும் இருப்பதாக இந்தியா சந்தேகிக்கின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP