சீனா கொடுத்த ஹம்பாந்தோட்டை குத்தகை 292 பில்லியன் டாலர்... வங்கியில் டெபாசிட்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் கிடைத்த 292.1 மில்லியன் டொலர் வைப்பில்
 | 

சீனா கொடுத்த ஹம்பாந்தோட்டை குத்தகை 292 பில்லியன் டாலர்... வங்கியில் டெபாசிட்


ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதில் இருந்து பெறப்பட்ட 292.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கை கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவிடம் 99 ஆண்டுகள் குதத்கை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்தள விமான நிலையமும் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன. மேலும் இலங்கையின் முக்கிய தளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கையில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. 

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் குறித்து இலங்கை துறைமுக அதிகார சபையும், சீன மேர்சன்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், இலங்கைக்கு 292.1 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அது மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP