இலங்கையின் துறைமுகத்துக்கு 1,480 கோடி வழங்கிய சீனா!

இலங்கையின் துறைமுகத்துக்கு 1480 கோடி வழங்கிய சீனா!
 | 

இலங்கையின் துறைமுகத்துக்கு 1,480 கோடி வழங்கிய சீனா!


இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி ஆகியவற்றிற்கு இடையில் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி சீனா இலங்கைக்கு 1,480 ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக 17,136 கோடி ரூபாய் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்துவதாக சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி ஒப்புக்கொண்டிருந்து. 

இதன் முதல் கட்ட பணம் இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 2017 டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. மீதித்தொகை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் இரண்டு தவணைகளில் செலுத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. 

அதன்படியே இன்று இந்த நிதி வழங்கப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP