Logo

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 | 

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தொடர்ந்து மூன்றாவது இலங்கை நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.  சபையை ஆரம்பிக்கும் முன்னதாகவே சபாநாயகர் இருக்கையை மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

சபாநாயகர் நாற்காலியில் மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருக்க  பெர்னாண்டோ பலவந்தமாக அமர்ந்துகொண்டார். பின்னர், சபா பீடத்தைச் சுற்றி நின்றுகொண்ட மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துள்ளனர்.   45 நிமிடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் ஏராளமான போலீசார் சூழ, சபாநாயகர் சபைக்குள் வர முயற்சித்தார். இந்நிலையில. மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாற்காலியைத் தூக்கி தாக்கினார்.

சபாநாயகர் தனது இருக்கைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நடுவில் வேறொரு இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதில், ''நவம்பர் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முதலாவது பத்தி நீக்கப்படுகிறது என்றும்,  மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான குரல் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது'' என்றும் அறிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு

ஆதரவாக யார் வாக்களிப்பது என கேட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினர் கைகளை உயர்த்தி வாக்களித்தனர். எதிராக வாக்களிப்போர் யார் எனக் கேட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபை நடவடிக்கைகளை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து பாதுகாப்புத் தரப்பினருடன் சபாநாயகர் வெளியேறினார்.

இதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து அமைதியாக வெளியேறிச் சென்றனர்.  மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்து சபையில் கூடியிருந்தனர்.

முன்னதாக, நாடாளுமன்ற அமர்வுகளின்போது மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடியை வீசி தாக்கியதாக ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலர் குற்றஞ்சாட்டினார்.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், இவ்வாறு மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ''மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரது மந்திரி சபையும் கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அரசாங்கத்தை முன்னெடுக்க அவர்களுக்கு எந்த தகுதியம் இல்லை'' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

அதே சமயம், எந்தவொரு காரணத்திற்காகவும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP