மத்திய வங்கி ஊழல் - அரசுக்கு 850 கோடி ரூபாய் இழப்பு!

மத்திய வங்கி ஊழல் குறித்து ஜனாதிபதி அறிக்கை
 | 

மத்திய வங்கி ஊழல் - அரசுக்கு 850 கோடி ரூபாய் இழப்பு!


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, இலங்கை அரசிற்கு 850 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, இலங்கை மத்திய வங்கியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது அறிக்கையை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வழங்கியிருந்தது.

இது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்த ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், 1,114.5 கோடி ரூபாய், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான பேர்பச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 850 கோடி  ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய வங்கி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாமல் செயலிழந்து காணப்பட்டனர். அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் குடும்பம் மற்றும் அவரது நிறுவனத்துக்காக, பென்ட ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் அளித்தமைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் செயற்பட வேண்டும் எனவும் பழைய சட்டங்களை ரத்து செய்து, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

அரச கடன் அமைப்பின் செயற்பாடுகள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பான் ஆசிய வங்கியின் முன்னாள் தலைவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவீனங்களையும் பெர்பச்சுவல் நிறுவனத்திடமிருந்து அறவிட வேண்டும் என  ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

எனவே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதில் இருந்து எந்தவிதத்திலும் நான் பின்வாங்கமாட்டேன். பிரதமர் அர்ஜுன மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அர்ஜுன மகேந்திரன் முறைகேடான, தவறான முறையில் தலையீடு செய்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP