இலங்கை மத்திய வங்கி முறைகேடு! ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

இலங்கை மத்திய வங்கி நிதி மோசடி - குற்றவாளிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உத்தரவு!
 | 

இலங்கை மத்திய வங்கி முறைகேடு! ஜனாதிபதி அதிரடி உத்தரவு!


இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனா அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 2015-16ம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் பெருமளவு நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. புகாரை விசாரிக்க விசாரணை ஆணைக் குழுவை அமைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனா. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியது. அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, "ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில், மத்திய வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சட்டத்துறை தலைவர் மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மத்திய வங்கி நிதி மோசடி விவகாரத்தில் நீதி வழங்கப்படும். லஞ்சம், ஊழல், மோசடி விசாரணை சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே எதிர் காலத்தில் நாட்டில் ஊழல் நடைபெறாத வகையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்" என்றார்.

மத்திய வங்கியில் நடந்த முறைகேட்டுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர்தான் காரணம் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறுகிறது. எனவே, இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், வங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP