இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கின்றது!

இலங்கையில் மின்சார தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கின்றது!
 | 

இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கின்றது!


இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு முன்னால் நேற்று மின்சார சபை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் நேற்றிரவு இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ.பி.கணேகலவை போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி, போலீஸார் எடுத்த நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் குறித்து எந்தவித அறிவித்தலும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சுலட்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP