சாதனைகளை பட்டியலிட முடியுமா? மைத்திரிக்கு மகிந்த சவால்

மைத்திரி அரசாங்கத்தால் முடியுமா? மகிந்த சவால்
 | 

சாதனைகளை பட்டியலிட முடியுமா? மைத்திரிக்கு மகிந்த சவால்


எனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு காட்டமுடியும், மைத்திரி அரசாங்கத்தால் அப்படி செய்ய முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் பிப்ரவரி மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் பலாங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சே, "நான் ஆட்சியில் இருக்கும்போது பெறப்பட்ட கடன் தொகையை விட மைத்திரி தலைமையிலான அரசு, சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் பெற்றுள்ளது. ஆனால் பெற்ற கடனுக்கேற்ப நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

பதிவி ஆசையில், பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முயற்சித்தார். எனினும் 5 ஆண்டுகள் மட்டுமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளார். அதனால் என் மீது அவரது கோபம் திரும்பியுள்ளது" என்றார்.

மகிந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் அரசு அறிவித்த சூழலில், மகிந்த சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP