இலங்கை தேர்தலில் போட்டியிடும் பௌத்த குரு!

இலங்கை - தமிழ் கட்சியில் போட்டியிடும் முதல் பௌத்த குரு!
 | 

இலங்கை தேர்தலில் போட்டியிடும் பௌத்த குரு!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பௌத்த மத குரு ஒருவர், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்  ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையில் உள்ள  நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சியின் சார்பில் அக்கட்சியில் உறுப்பினராக உள்ள பௌத்த குரு ஒருவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் பெயர் விபரங்கள் வெளியாக வில்லை. இலங்கை வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் பௌத்த மத குரு ஒருவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP