இலங்கையில் கல்வியை இழக்கும் சிறுவர்கள்!

இலங்கையில் கல்வியை இழக்கும் சிறுவர்கள்!
 | 

இலங்கையில்  கல்வியை இழக்கும் சிறுவர்கள்!


இலங்கையில் 461,000 சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த நிரோஷன் பிரேமரத்ன, ஒரு மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவையே ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். 

மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை விட, மஹிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைவதை அனுமதிக்கக்கூடாது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், சட்ட ஆட்சி, போதைப்பொருளற்ற சமூகம், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றனவே மஹிந்த ஆட்சியில் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இதையே இந்த அரசாங்கத்திடமும் எதிர்பார்த்தோம். இருப்பினும் நாங்கள் பெற்றது என்ன? பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதா? இலங்கை அரசாங்கத்தின் ஆட்சி குறித்து மக்கள் இன்று கவலையடைகின்றனர். 580,000 மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP