குண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை பிரதமர் அவசர ஆலோசனை

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
 | 

குண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை பிரதமர் அவசர ஆலோசனை

இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் திருநாளான இன்று, இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் இன்று  நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளனா். 400க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP