கதிர்காமத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஜாமின்

58பேரும் 200,000 ரூபாய் அபராதம் செலுத்தி ஜாமினில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்
 | 

கதிர்காமத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஜாமின்


கதிர்காமத்தில் போலீசை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 58 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 

கதிர்காமத்தில் நேற்று தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது போலீசார் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து, போலீஸாருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், கதிர்காமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் 13 பெண்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை திஸ்ஸமஹராம நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 200,000 ரூபாய் அபராதம் செலுத்தி ஜாமினில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேநேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP