Logo

இலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

இலங்கையின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கை குறித்து விசாரிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
 | 

இலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

இலங்கையின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கை குறித்து விசாரிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் கொழும்பு நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர். 

உலக நாடுகளை உலுக்கிய இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை அரசு கைது செய்தது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்ததாக இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சூழலில், இலங்கையின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கை குறித்து விசாரிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP