இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் கொலை? தொடரும் பயங்கரம்!

மாளிகாவத்தை அரலிய உயன பகுதியிலிருந்து 37 வயது மதிக்கத்தக்க பிரிட்டன் பிரஜை ஒருவரின் உடல் மீட்கப்பட்டது
 | 

இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் கொலை? தொடரும் பயங்கரம்!


இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களில் சிலர் விபத்து மற்றும் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாளிகாவத்தை போலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து 37 வயது மதிக்கத்தக்க பிரிட்டன் பிரஜை ஒருவரின் உடல் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் இலங்கைக்கு பயணம் செய்திருந்த அவர், வரும் 25 ம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்க திட்டமிட்டிருந்ததாக அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்ததில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் எப்படி மரணம் அடைந்தார், இது கொலையா அல்லது விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP