இலங்கையின் 3 மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

காவல்துறை அதிகாரிகள்- இடமாற்றங்களுக்கான உத்தரவை தேசிய போலீஸ் கமிஷன் (NPC) மற்றும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

இலங்கையின் 3 மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!


இலங்கையின் 3 மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரி எஸ்.எம் விக்கிரமசிங்க, விஷேச பாதுகாப்பு படையில் இருந்து ஊவா மற்றும் மத்திய மாகாண பதில் காவல்துறை அதிகாரியாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த பதில் காவல்துறை அதிகாரியாக மத்திய மாகாணத்தில் பதவியில் இருந்து வந்த ஜகத் அபேகுணவர்த்தன, வடகிழக்கு மற்றும் வட மத்திய மாகாணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஊவா மாகாண மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த யூ. பெனார்ண்டோ, தென் மற்றும் சப்புரகமுக மாகாணங்களுக்கான பதில் காவல்துறை அதிகாரியாக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவை தேசிய போலீஸ் கமிஷன் (NPC) மற்றும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP