வறட்சியின் பிடியில் 3 லட்சம் பேர்!

கடந்த ஆண்டு கடுமையான மழை வெள்ளமும் கடுமையான வரட்சியும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 | 

வறட்சியின் பிடியில் 3 லட்சம் பேர்!


இலங்கையில் நிலவி வரும் வறட்சி காரணமாக 3 லட்சம் பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மன்னார், வவுனியா, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் 2,93,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கடுமையான மழை வெள்ளமும் கடுமையான வறட்சியும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளம், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 

வறட்சி காரணமாக விவசாய செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, வடகிழக்கு பருவ மழை உரிய காலப்பகுதியில் பெய்யவில்லை என அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரிசி பிரதான உணவாக காணப்படுகின்றது. மேலும் விவசாயிகள் மழைக்காலத்தை நம்பியே நெல் விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP