இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள்

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள்
 | 

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் வீடுகளை கட்டி வழங்கி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போரில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள 131 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு இந்திய அரசு முன் வந்துள்ளது. மட்டக்களப்பு வவுணதீவில் இந்த வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5000 இந்திய வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்புக்கு நிறைவேற்றப்பட உள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் சுமீத் ஜெராத் தலைமையில் பங்கஸ் குமார் சிங், எம்.சிவகுரு, கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி டி.சி.மஞ்சுநாத், சுஜா மேனன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP