உரிய விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் உள்பட 13 பேர் கைது

உரிய விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த ஒரு இந்தியர் உள்பட 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது கொழும்பு உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
 | 

உரிய விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் உள்பட 13 பேர் கைது

உரிய விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த ஒரு இந்தியர் உள்பட 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது கொழும்பு தேவாலயம் உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 359 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இலங்கையில் குண்டு வெடிப்பை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொழும்புவில் உள்ள மவுண்ட் லவினியா பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உரிய விசா இன்றி தங்கியிருந்த இந்தியர் ஒருவர் உள்பட 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 10 பேர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தலா ஒருவர் ஈராக் மற்றும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP