சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..

சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..
 | 

சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை பயங்கரமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டின் கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்குள்ள சின்ஜியோன்ஜி என்ற தேவாலயத்தின் உறுப்பினர்கள்தான் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..

தேகு நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கி நேற்று வரை தினமும் ஒருவர் என்ற வகையில் 5 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 123 பேருக்கு நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்து உயர்மட்ட சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அதிபர் மூன் ஜே இன், கொரோனாவால் தென்கொரியா மிக பயங்கரமான திருப்பு முனையை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத வழிபாடு உள்பட எந்தவொரு காரணத்துக்காகவும் மக்கள் பொதுஇடங்களில் கூட கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தென்கொரியாவை தொடர்ந்து, ஈரானிலும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது.

சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..

அந்த நாட்டின் குவாம் மற்றும் மர்காஷி மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டு அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி அங்குள்ள 14 மாகாணங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டு உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP