ஏர்போர்டிலேயே குழந்தையை விட்டுச்சென்ற பெண்: திரும்பி வந்த விமானம்

சவுதியில் இருந்து கோலாலம்பூர் சென்ற SV832 விமானத்தில் இருந்த பெண் பயணி, தனது குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றதால், புறப்பட்ட இடத்திற்கே விமானம் மீண்டும் திரும்பியது.
 | 

ஏர்போர்டிலேயே குழந்தையை விட்டுச்சென்ற பெண்: திரும்பி வந்த விமானம்

சவுதியில் இருந்து கோலாலம்பூர் சென்ற SV832 விமானத்தில் இருந்த பெண் பயணி, தனது குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றதால், சில நிமிடங்களிலேயே புறப்பட்ட இடத்திற்கே விமானம் மீண்டும் திரும்பியது.  

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் இருக்கும் கிங் அப்துலாசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஜெட்டாவில் இருந்து மலேசியாவுக்கு அண்மையில் சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்  தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவந்துவிட்டதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் மீண்டும் கிங் அப்துலாசிஸ் விமான நிலையத்திற்கு விமானத்தை திரும்ப இயக்கியுள்ளனர்.

விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய பின்பு அப்பெண் தனது குழந்தையை மீட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP