Logo

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.
 | 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

இன்று காலை விடிந்தது முதல் சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு நிறைந்ததாக இருந்தது. உலக மக்கள் பார்வை அனைத்தும் சிங்கப்பூரை நோக்கியே இருந்தன. வடகொரியா நாடு உருவான பின், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை.  

13 நொடிகள் கைக்குலுக்கள் 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஷங்க்ரி லா ஹோட்டலிலிருந்து வடகொரிய தலைவர் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலிலிருந்து சரியாக 8:30 மணிக்கு சந்திப்பு நிகழும் சென்டோசா ஹோட்டலுக்கு கிளம்பினர். சரியாக 9 மணிக்கு இருவரும் கைகொடுத்து பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இவர்களது கைக்குலுக்கள் சரியாக 13 நொடிகள் நீடித்தன. 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

பெரிய திரையில் கண்டுகளித்த மக்கள்

சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை நேரலையில் கண்டனர்.  அமெரிக்காவில் பெரிய திரைகள் ஏற்படுத்தி ஆங்காங்கே மக்கள் கண்டுகளித்தனர். அந்த அளவுக்கு இந்த சந்திப்பு அதீத கவனத்தை ஈர்த்திருந்தது சமூக வலைதளங்களிலும் வெளிப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பாலமாக இருந்த தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

நேரடி ஒளிபரப்பை பார்த்த தென்கொரிய அதிபர்:

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வீடியோ நேரடி ஒளிபரப்பு மூலம் ட்ரம்ப்-கிம் சந்திப்பைக் கண்டார். மேலும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

முதற்கட்ட பேச்சுவார்த்தை 

பின்னர் நடந்த உச்சிமாநாட்டின்போது, இரு தலைவர்களும் நிமிடங்கள் பேசிக் கொண்டனர். 1800 நேபாள கூர்க்காக்கள், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், வட கோரிய ராணுவ அதிகாரிகள், சிங்கப்பூர் போலீஸ் என பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இரு தலைவர்களும் பேசினர். 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

கையெழுத்தான ஒப்பந்தம்

இந்த சந்திப்புக்கு பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி ஒழிப்பு வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்'' என்று டிரம்ப் கூறினார்.

இந்த சந்திப்பு பல தடைகளை உடைத்து நடந்துள்ளதாகவும், இந்த சந்திப்பால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என தான் நம்புவதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்தார். 

ஒப்பந்தம் கையெழுத்தானது தொடர்பாக ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், ''முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை கூட சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும், தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின்போது, அறிந்து கொண்டேன் என்றார். வெள்ளை மாளிகைக்கு கிம்மை வரவேற்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, கண்டிப்பாக அழைப்பேன் என்றார். 

கிம் ஜோங் கூறும்போது, "கடந்த காலத்தை நாங்கள் மறக்க இருக்கிறோம். எனவே வரும் காலம் இந்த உலகுக்கே இனிமையானதாக அமையும்" என்றார். 

முதல்கட்ட சந்திப்பு முடிவடைந்த நிலையில், இரு நாட்டு தலைவர்களும் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர். 

அடேங்கப்பா விருந்து!

இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு ட்ரம்ப்-கிம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. 

சுவை மற்றும் ஆடம்பர லஞ்ச்சுக்கு சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்திருந்தது. ஸ்டார்டர்ஸ் வகையில், பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

இது தவிர 'Oiseon' எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது. 

மெயின் கோர்சில்,  ஃபீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, அவிக்கப்பட்ட பிரக்கோலியுடன் உருளைக்கிழங்கு  சேர்த் டாபிநோஸ், ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய யாங்ஷு ஃப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், சோயா மீன் மற்றும் முள்ளங்கி சேர்த்த டேக்கு, காய்கறிகள். 

டேசர்ட் வகையில், டார்க் சாக்லேட் டார்ட்லெட் கனாசே, ஹாகேண்டாஸ் வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் மற்றும் டிராபிஜின்னே ஆகியவற்றை இடம்பெற்றிருந்தது. 

இதனைத் தொடர்ந்து சிறிது ஓய்வுக்கு பிறகு, இரு தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 

அமெரிக்கா - வட கொரியா நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர்.  

இது குறித்து விரிவான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பத்திரியாளர்களை சந்தித்து வெளியிடுவார் என குறிப்பிடப்பட்டது. 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

இரு தமிழர்களின் முக்கியத்துவம்: 

இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்னணியில் இரு தமிழர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். இவர்கள் சிங்கப்பூர் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகியோர். வெளியுறவுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ணன் ட்ரம்ப் - கிம் ஜாங் இருவருக்கும் இடையிலான சந்திப்பு அறிவிப்பானது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர்.

பாலகிருஷ்ணன், சந்திப்புக்காக வாஷிங்டனுக்கும், வடகொரியத் தலைநகர் யாங்யாங்குக்கும், சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். இடையே அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்து அறிவித்தார். அதன்பின், வாஷிங்டனுக்குச் சென்று அவரை சமாதானம் செய்து, சந்திப்பு வெற்றிகரமாக நடக்கத் துணையாக இருந்தார். 

பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர். 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

அமைச்சர் சண்முகம், சிங்கப்பூர் அரசில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக உள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, தங்குமிடங்கள், சந்திப்பை சுமூகமாகக் கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் இவர். 

இவர் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர். வடகொரியாவின் விவகார ஆணையத்தின் தலைவராக இருந்துவரும் சண்முகம்தான், இரு அதிபர்களையும் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார். 

கண்ணீர் வடித்த டென்னிஸ் ரோட்மேன்!

முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேனும் சிங்கப்பூரில் தான் உள்ளார். கூடைப்பந்து விளையாட்டின் ரசிகரான கிம் ஜோங் உன்னுக்கு டென்னிஸ் ரோட்மேனுடன் நல்ல நட்பு உள்ளது. 

இந்த சந்திப்புக்காக சிங்கப்பூர் வந்துள்ளதாக தெரிவித்த அவர், ``ட்ரம்ப் என்னை தொடர்புகொண்டார். அவர் என்னைப் பற்றி பெருமையாக கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நாள் ட்ரம்ப்-கிம்மின் நாள், உலகின் நாள், இது என்னுடையது அல்ல'' என்றார். இந்த பேட்டின்போது டென்னிஸ் ரோட்மேன் உணர்ச்சிமிகுதியால் அழுதுவிட்டார்.

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

கிம் கொண்டுவந்த ரெடிமேட் கழிவறையின் ரகசியமும் வெளியானது

வட கோரிய அதிபரின் பாதுகாப்பின் உச்சகட்டமாக, அவருக்கு சொந்தமாக ரெடிமேட் கழிவறை கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா மீதான் நம்பிக்கையின்மை காரணமாக இப்படி இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

கிம் ஜாங் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். தனது முதல் வெளிநாட்டு அரசுமுறை பயணத்தில் பல பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன. எதிரிகள் எந்தவிதத்திலும் தன்னைப்பற்றிய விவரங்களை கைபற்றிவிடக் கூடாது என்பதே இதற்கு காரணம் என வட கொரிய தரப்பு கூறியுள்ளது. மேலும், தனது உடலில் இருந்து வெளியேறும் கழிப்பொருட்கள் சிறுநீர், மலம் ஆகியவை கூட எதிரிகள் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கிம் கவனமாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே அதிபர் கிம் சொந்தமாக டாய்லெட் கொண்டு வந்துள்ளார். இந்த விவரங்களைக் கொண்டு எதிரிகள் சதித திட்டம் தீட்டிவிட முடியும் என்பதன் அச்சமே இதற்கு காரணம். 

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ  வரை 

உடலின் கழிவுப்பொருட்களில் இருந்து குறிப்பாக சிறுநீர், மலம் ஆகியவற்றில் இருந்து ஒருமனிதனின் உணவுப்பழக்கம், உடலில் உள்ள குறைபாடுகள், ரத்தத்தில் சர்க்கரை, உடல் பருமனுக்கான காரணம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சமீபத்தில், உடலில் ஏற்பட்டிருந்த பிரச்சினை, எப்போது சாப்பிட்டார், உணவுப்பழக்கம், புற்றுநோய், குடல்நோய் உள்ளிட்ட அனைத்து விதமான விஷயங்களையும் தேர்ந்த மருத்துவர்களால் அறிந்துவிட முடியும்.

கிம்முக்கான இரு டீகாய் விமானம், தனிக் கப்பலில் தேவையான உணவுகள், பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. 

அவர் ஹோட்டலில் தங்கியது முதல் ட்ரம்ப் சந்திப்பு மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தான் கொண்டுவந்திருக்கும் உணவுகளையே சாப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP