ஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு
 | 

ஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்தனர். 

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர். சில இடங்களில் வாக்குச்சாவடிகள் தாமதமாக திறந்ததால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

தலைநகர் காபுலில் உள்ள சில பள்ளிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பீதியடைந்த வாக்காளர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடினெர். இதேபோல் நாட்டின் பிறபகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் மற்றும் தேர்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர்  உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP