இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெற்றப்பட்டது

இலங்கையில் இந்த மாத துவக்கத்தில் ஏற்பட்ட இன கலவரத்தால், அந்நாட்டு அதிபர் சிறிசேன, நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். 11 நாட்கள் நீடித்த இந்த அவசர நிலை நேற்று நள்ளிரவு திரும்பப் பெறப்பட்டது.
 | 

கடந்த 6ம் தேதி இலங்கையில் கண்டியில், புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. பல இடங்களில் இது வன்முறையாக மாறியது. கலவரங்களில் 3 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர். கடைகள், வாகனங்கள் என பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், அதிபர் சிறிசேன இந்தியா மற்றும் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இன்று நாடு திரும்பிய அவர், அவசர நிலையை தளர்த்தியுள்ளதாக, அதிபரின் செயலாளர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் இதுகுறித்து சிறிசேன, "பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தபின், நேற்று நள்ளிரவு முதல் அவசர நிலையை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன்" என எழுதினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP