இந்தோனேசிய சுனாமி; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை வெடித்ததை தொடர்ந்து, ஏற்பட்ட சுனாமியால், பலியானோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 | 

இந்தோனேசியாவின் சண்டா பகுதியில் அமைந்துள்ள அனக் கிரகடோவா எரிமலை நேற்று திடீரென வெடித்தது. இதனால், கடலுக்கு அடியில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவுகளின் காரணமாக சுனாமி பேரலைகள் எழுந்தன. இவை, நேற்று இந்தோனேசிய கடலோர பகுதிகளை, உள்ளூர் நேரப்படி, இரவு 9.30 மணிக்கு தாக்கியது. 

எந்த எச்சரிக்கையும் விடுக்கடப்படாததால், சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். பண்டெங்லாங், லம்புங், செராங் ஆகிய பகுதிகளில் பலர் இதில் இறந்தனர். முக்கியமாக லம்புங் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் இறந்ததாக இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது. பலியானோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. 843 பேர் காயமடைந்துள்ளதாக தகவலைகள் வெளியாகியுள்ளது. 22 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP