படம் பேசுது: அணுஆயுத வீரியமும் மீளாத் துயரமும்!

இரண்டாம் உலகப் போரின்போது 1945ல் ஆகஸ்டு 6ஆம் தேதி அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அங்கு அமைக்கப்பட்ட சமாதானப் பூங்காவில் உலகின் மிகப் பெரிய பேரழிவின் நாளை அம்மக்கள் நினைவுகூர்ந்தனர்.
 | 

படம் பேசுது: அணுஆயுத வீரியமும் மீளாத் துயரமும்!

இரண்டாம் உலகப் போரின்போது 1945ல் ஆகஸ்டு 6ஆம் தேதி அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.  இதற்காக அங்கு அமைக்கப்பட்ட சமாதானப் பூங்காவில் உலகின் மிகப் பெரிய பேரழிவின் நாளை அம்மக்கள் நினைவுகூர்ந்தனர். 

இரண்டாம் உலக போரில் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை பி 29 எனோலா கே விமானம்  மூலம் யுரோனியம் அணுகுண்டை 1800 அடி உயரத்தில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. இதனால் 4 சதுர மைல் அழிந்து சின்னாபின்னமானது. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து லட்காக்கனக்கானோர் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டனர். 

அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன் 16 மணிநேரம் கழித்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றார். நடந்தவற்றை உணரவே முடியாத சூழலில் அடுத்த 3 நாட்கள் கழித்து ஃபேட் மேன் என்ற 2வது அணுகுண்டை நாகசாகி மீது வீசியது. இதற்கு 40, 000 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு தாங்குதல்களால் ஜப்பான் நிலைகுலைந்து, நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தது.

இன்றளவும் கதிர் வீச்சால் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவாரகவும் பல்வேறு குறைபாடுகளுடனும் பிறக்கின்றனர். உலக பேரழிவு நாட்களிலேயே மோசமானதாக இந்நாள் கருதப்படுகிறது.  

படம் பேசுது: அணுஆயுத வீரியமும் மீளாத் துயரமும்!

இந்த நாளை நினைவுகூறும் விதமாக ஹிரோஷிமாவில் உள்ள சமாதானப் பூங்காவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்து மக்கள் வந்திருந்தனர். உலகின் மோசமான பெரழிவுக்கு ஆளான ஜப்பான், தனது விடா முயற்சியால் இன்று அசைக்க முடியாத நாடாக விளங்குகிறது. இந்நாளில் 70 நாடுகளிலிருந்து வந்த தூதர்கள் மற்றும் சுமார் 50000 பொதுமக்கள் சமாதானப் பூங்காவுக்கு வந்து அமைதிக்காக வேண்டினர். அங்குள்ள மொண்டாயுஸு நதியில் அமைதியை வலியுறுத்தி ஒளிரச் செய்யும் விளக்குகளை ஏற்றி மிதக்கவிட்டனர்.  இன்றும் அணுஆயுத பயன்பாட்டை கைவிடாமல் பல நாடுகளும் முரண்டுபிடிக்கும் சூழலில் அதன் வீரியத்தை காட்சியிலேயே நினைவுபடுத்துவதாக நிற்கிறது அந்நகரம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP