தேர்தல் செல்லும்; மாலத்தீவுகள் அதிபருக்கு உச்ச நீதிமன்றம் அடி!

மாலத்தீவுகளின் அதிபர் அப்துல்லா யமீன் தொடுத்த தேர்தல் மோசடி வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.
 | 

மாலத்தீவுகளில், சர்சைக்குரிய முறையில் ஆட்சி நடத்தி வந்த அதிபர் அப்துல்லா யமீன், தனக்கு எதிராக சென்ற அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் என நூற்றுக்கணக்கானோரை சிறையில் அடைத்தார். அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சியின் இப்ராஹிம் முஹம்மது சொலி மாபெரும் வெற்றி பெற்றார். 

இதைத் தொடர்ந்து, தேர்தலில் பல்வேறு மோசடிகள் நடந்ததாகவும், அதனால் தேர்தல் செல்லாது எனவும் அதிபர் அப்துல்லா யமீன் கூறி வந்தார். நவம்பர் 17ம் தேதியோடு யமீனின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தேர்தல் விதிமீறலை குறிப்பிட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென மனு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், தேர்தல் மோசடிக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கை ஒருமனதாக தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP