பாட்டிலுக்குள் சிசுக்கள் உடல்: பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல்

ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின்போது தரைக்கு அடியில் கண்ணாடி பாட்டிலுக்குள் குழந்தைகளின் உடல்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
 | 

பாட்டிலுக்குள் சிசுக்கள் உடல்: பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல்

பாட்டிலுக்குள் சிசுக்கள் உடல்: பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல்ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின்போது தரைக்கு அடியில் கண்ணாடி பாட்டிலுக்குள் குழந்தைகளின் உடல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 

ஜப்பானின் டோக்கியோ நகரில் வீடு ஒன்றைப் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. சில வருடங்களாக யாரும் வசிக்காத நிலையில், மருத்துவர் ஒருவரிடம் இருந்து சமீபத்தில் மற்றொருவர் இதனை வாங்கிப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 

அப்போது, பூச்சி அழிப்பு ஊழியர்கள் வீட்டின் தரைக்குக் கீழே 3 அல்லது 4 கண்ணாடி பாட்டில்கள் இருந்ததைக் கண்டு சந்தேகத்துடன் அதனை வெளியே எடுத்தனர். அதில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளே வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர். அவற்றில் சில தொப்புள் கொடிகளுடன் இருந்துள்ளன. 

வேதிப்பொருள் கொண்டு குழந்தைகளின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP