குகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம் 

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறார் கால்பந்து அணி மற்றும் பயிற்சியாளர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியான நிலையில் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகலாம் என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது.
 | 

குகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம் 

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறார் கால்பந்து அணி மற்றும் அதன் பயிற்சியாளர் உயிருடன் இருக்கும்  வீடியோ வெளியான நிலையில் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகலாம் என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது. 

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகையில், கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரையான 12 சிறார் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவர்களை கால்பந்து நிர்வாக குழு தேடி வந்த நிலையில், தாய்லாந்து பேரிடர் மீட்புப் படையினர் இவர்களை தேடியதில், அவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கி இருப்பது தெரிந்தது. 

நிலைமை அறிந்த பிரிட்டிஷ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது. 10 நாட்களாய் குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே இவ்வளவு நாள் ஆனது. 

இந்த  நிலையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதன் கடற்படை தளபதி ஆனந்த் சுராவன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "குகைக்குள் இருக்கும் அவர்களுக்கு குறைந்தபட்சம் 4  மாதங்களுக்கு தேவையான உணவை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அங்கிருக்கும் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை. 13 பேரும் தண்ணீரில் நீச்சல்  அடிக்க கற்க வேண்டும் அல்லது குகையிலுள்ள தண்ணீர் வற்றும்வரை காத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

சிறுவர்களை மீட்கும் முயற்சியில் 1000க்கும் மேற்பட்ட தாய்லாந்து ராணுவத்தினர், அவர்களோடு இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளின் மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கேவ் டைவிங் குழு விரைந்தது 

 தாம் லுவாங் குகையின் அமைப்பு மோசமானதாக கருதப்படுவதால், மீட்பு நடவாடிக்கையே சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்று ராணுவத்தினர் கவனமாக உள்ளனர். இந்தக் குகை குறுகிய வழிகளால் இணைக்கப்பட்ட பல பெரிய அறைகளை கொண்டுள்ளது. அதன் ஒரு அறையில் தான் அனைவரும் சிக்கியுள்ளனர். அறைகளை இணைக்கும் வழிகள் குறுகலாக உள்ளதால் ஊர்ந்துதான் மட்டுமே செல்ல முடியும். ஆனால் வழி அனைத்தும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதி தரைப் பகுதியிலிருந்து 1 கிமீ கீழே உள்ளது.

நீச்சல் தெரிந்தவர்களால் கூட குகைக்குள் நீந்த முடியாது. குகைக்குள் நீந்திச் செல்வதற்கு கேவ் டைவிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான இங்கிலாந்திலிருந்து கேவ் டைவிங் வல்லுனர்கள் விரைந்துள்ளனர். இந்தக் குழுவினரால் கரடுமுரடான இடத்தில் இருட்டிலும் நீந்த முடியும். இது போன்ற வீரர்கள் இருவர் தான், சிறுவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதன் வீடியோவை வெளியிட்டனர். 

சிறுவர்களை நீந்த முயற்சித்தாலும் அவர்களால் நீண்ட தூரம் வர முடியாது, இடையில் சிறுவர்களால் நீந்த முடியவில்லை என்றாலும், நிற்காத மழையினால் நீர்மட்டம் உயர்ந்தால் பெரும் ஆபத்து நெரிடும். இவற்றை மனதில் வைத்தே தாய்லாந்து ராணுவம் மீட்புக்கு சில மாதங்கள் ஆகும் என்றுள்ளது. 

ஆனால் அதிலும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். தொடர் மழையால் குகையின் நிலப்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை மாறியிருக்கலாம், அவர்கள் அதிக நாட்கள் அங்கு இருப்பது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP