தாய்லாந்து: 9 நாட்களுக்கு பின் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

தாய்லாந்தில் 9 தினங்களுக்கு முன் காணாமல் போன இளம் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் உயிரோடு உள்ளனர். அவர்களை மீட்க முழு வீச்சில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 | 

சில தினங்களுக்கு முன், வடக்கு தாய்லாந்தின் பட்டயா பகுதிக்கு அருகே உள்ள குகைகளுக்குள் இளம் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் கடும் மழை பெய்ததால், குகைகள் நீருக்குள் மூழ்கின. 

குகைக்குள் சென்ற 13 பேரையும் கண்டுபிடிக்க தேடுதல் பணிகள் துவங்கப்பட்டன. குகைகளுக்கு வெளியே தண்ணீர் பெருமளவு அதிகரித்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து, நீர் மூழ்கி நிபுணர்கள் தாய்லாந்து அழைத்து வரப்பட்டனர். 9 நாட்களுக்கு பிறகு, சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நீர் மூழ்கி நிபுணர், அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று, அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதாக உறுதி செய்தார். ஆனால், சிறுவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாததாலும், தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், தற்போதைக்கு அவர்களை வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அளவு குறையும் வரை அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சிறுவர்கள் உயிருடன் இருக்கும் செய்தி தெரிந்தவுடன், அங்கு கண்ணீருடன் காத்திருந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். பல நாடுகளில் உள்ள நிபுணர்கள் உதவியுடன் சிறுவர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP