ஆப்கான் தேர்தலில் தீவிரவாத தாக்குதல்: 67 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் போது, தலிபான் தீவிரவாதிகள் நடத்திய நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் 67 பேர் இறந்துள்ளனர்; 126 பேர் காயமடைந்துள்ளனர்.
 | 

ஆப்கான் தேர்தலில் தீவிரவாத தாக்குதல்: 67 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் போது, தலிபான் தீவிரவாதிகள் நடத்திய நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் 67 பேர் இறந்துள்ளனர்; 126 பேர் காயமடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அந்நாட்டில், அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்து வருவதாகவும், அதை களைந்து, புதிய அரசு அமைக்க வேண்டுமென கூறி தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது தலிபான் தீவிரவாத அமைப்பு. தேர்தல் பிரச்சாரங்களின் போது நடந்த பல்வேறு தாக்குதல்களில் வேட்பாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். வாக்குப்பதிவை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. பல வாக்குச்சாவடிகளில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலைநகர் காபூலில் ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 76 இடங்களில் தீவிரவாதிகள் வாக்குசாவடிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததாகவும் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 67 பேர் இறந்துள்ளனர். அதில் 31 பேர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்கள் 27 பேர் மற்றும் பாதுகாப்பு படையினர் 9 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

70,000 போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஆப்கானிஸ்தான் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இறுதியில் தீவிரவாதிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்றும், தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

2014ம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை இதை விட இருமடங்கு தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP