ராணுவ வீரர்களை கட்டித்தழுவிய தலிபான்கள்: ஆப்கனில் வைரலாகும் ரமலான் செல்ஃபி

ஆப்கானிஸ்தானில் ரமலான் கொண்டாட்டத்தையொட்டி ராணுவத்தினரும், தலிபான் தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அவர்களது செல்ஃபி ஆப்கனில் வைரலாகி வருகிறது.
 | 

ராணுவ வீரர்களை கட்டித்தழுவிய தலிபான்கள்: ஆப்கனில் வைரலாகும் ரமலான் செ

ஆப்கானிஸ்தானில் ரமலான் கொண்டாட்டத்தையொட்டி ராணுவத்தினரும், தலிபான் தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அவர்களது செல்ஃபி ஆப்கனில் வைரலாகி வருகிறது. 

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசு படைகளும், அமெரிக்க கூட்டணி படையும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி 5 நாட்கள் போர் நிறுத்தம் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அறிவித்தார். இதையடுத்து தலிபான் தீவிரவாதிகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர். 

இதனால் ஆப்கானிஸ்தானின் நகரங்களில், சில நாட்களாக அமைதியான சூழல் நிலவி வருகிறது.  இருப்பினும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். 

ராணுவ வீரர்களை கட்டித்தழுவிய தலிபான்கள்: ஆப்கனில் வைரலாகும் ரமலான் செ

இதனிடையே, காபூலில் உள்ள மைதானத்தில் ரம்லான் சிறப்புத் தொழுகை நடந்து முடிந்ததும், மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

அப்போது திடீரென அங்கு வாகனத்தில் தலிபான் தீவீரவாதிகள் வந்தனர். அங்கிருந்த மக்களுக்கு அவர்கள் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்களையும் ஒருவரையொருவர்த் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதையும் பகிர்ந்தனர். இந்தக் காட்சி அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP