தைவான் நிலநடுக்கம்: சரிந்து விழும் கட்டிடத்தில் மீட்புப் பணிகள்

தைவான் நிலநடுக்கத்தால் சரிந்து விழும் கட்டிடம்; பலி எண்ணிக்கை உயர்வு
 | 

தைவான் நிலநடுக்கம்: சரிந்து விழும் கட்டிடத்தில் மீட்புப் பணிகள்


தைவான் நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் தைவானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் சரிந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர். 50கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிகிறது. முக்கியமாக ஒரு 12 மாடி குடியிருப்பு கட்டிடமும் முற்றிலும் சரிந்து போனது அங்கு பெரும் பதற்றதை ஏற்படுத்தியது. 

அந்த கட்டிடத்தின் கீழ் தளங்கள் முழுவதுமாக நசுங்கின. கட்டிடம் மொத்தமாக சரிந்து விழாமல் இருக்க, பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் சேர்ந்து அதை முட்டுக் கொடுத்து நிறுத்தியுள்ளனர். 

அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் ஓட்டல் ஒன்றும், மேல் தளங்களில் வீடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

அந்த ஓட்டலில் இருந்த 13 பேரும், குடியிருப்புகளில் வசித்து வந்த 39 பேரும் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 4 உடல்கள் அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்தாலும், அந்த கட்டிடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP