சிங்கப்பூர் கொடி அவமதிப்பு: இந்தியரின் வேலை பறிபோனது 

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் தேசிய கொடியை அவமதித்து இந்திய கொடிய போற்றுவதாய் பொருள்பட ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்தியர் பணியிலிருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.
 | 

சிங்கப்பூர் கொடி அவமதிப்பு: இந்தியரின் வேலை பறிபோனது 

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் தேசிய கொடியை அவமதித்து இந்திய கொடிய போற்றுவதாய் பொருள்பட பேஸ்புக்கில் பதிவிட்ட இந்தியர் பணியிலிருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவைச் சேர்ந்த அவிஜித் தாஸ் பட்நாயக். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.  அங்கு இருக்கும் டி.பி.எஸ். வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களுக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைபடத்தை பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் 'எனது இதயம் இந்தியனாக உள்ளது' என்று வாசகம் எழுதி ஒரு படத்தையும் பகிர்ந்தார். ஒரு டி சர்ட்டில் இருக்கும் சிங்கப்பூர் கொடி கிழிக்கப்பட்டு அதன் அடியில் இந்திய கொடி காட்சியளிப்பது போல் அந்தப் படம் இருந்தது. இந்த ஃபேஸ்புக் பதிவு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  சிங்கப்பூர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இருந்த இந்த பதிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, இந்த பதிவு ஃபேஸ்புக்கால் நீக்கப்பட்டது.  

இது தொடர்பாக அவர் பணிபுரிந்து வந்த டி.பி.எஸ். வங்கிக்கு புகார் சென்றது. இதற்கு அப்போது பதிலளித்த அந்த நிறுவனம், சிங்கப்பூரில் வசித்து வந்தாலும் மனதளவில் அவர் இந்தியனாக இருப்பதை வெளிப்படுத்த விரும்பி இந்த பதிவினை அவிஜித் செய்துள்ளார் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. 

ஆனால், டி.பி.எஸ். வங்கி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  அவிஜித் தாஸ் பட்நாயக் எங்களது வங்கி பணியில் இல்லை. இதுபோன்ற செயல்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்  என குறிப்பிட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP