ஜப்பானில் 'சீரியல் ட்விட்டர் கில்லர் கைது'- ஃபிரிட்ஜில் பதுக்கப்பட்ட 9 உடல்களின் பின்னணி!

ஜப்பானில் ட்விட்டர் வழியாக 9 பேரை கொன்று குற்றத்தை மறைக்க முயன்ற 'சீரியல் ட்விட்டர் கில்லர்' உளவியல் விசாரணையின் மூலம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஷிராஷி உளவியல் ஆலோசகர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
 | 

ஜப்பானில் 'சீரியல் ட்விட்டர் கில்லர் கைது'- ஃபிரிட்ஜில் பதுக்கப்பட்ட 9 உடல்களின் பின்னணி!

ஜப்பானில் ட்விட்டர் வழியாக 9 பேரை கொன்று குற்றத்தை மறைக்க முயன்ற 'சீரியல் ட்விட்டர் கில்லர்' உளவியல் விசாரணையின் மூலம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

ஜப்பானைச் சேர்ந்த டகாஹிரோ ஷிராஷி (27 வயது) இளைஞர் ட்விட்டரில் கவர்ச்சிகரமாக பதிவுகளை இட்டு அதன் மூலம் பயனீட்டாளர்களை கவரக்கூடியவராக வலம் வந்துள்ளார். தனது ட்விட்டர் பதிவுகளின் மூலம் ஆட்கள் பலரை திரட்டி இதுவரை 9 பேரை கொலை செய்துள்ளார்.  நீண்ட காலம் மர்மமாக இருந்த இந்தக் கொலைச் சம்பவங்களின் முடிச்சுகள் சமீபத்தில் அவிழ ஆரம்பித்தன. 

தொடர்ந்து இளைஞர்கள் காணாமல் போன விவகாரத்தை கண்காணித்த ஜப்பான் போலீஸ், சில மாதங்களுக்குமுன் சந்தேகத்தின்பேரில் டாகாஹிரோ என்பவர் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகர மர்மங்கள் பல அவர்களுக்கு காத்திருந்தன. வீட்டின் கதவுக்குப் பின்னால் ரத்தக்கறை படிந்திருந்தன. 

குளிர்சாதனப்பெட்டிக்குள் டூல் பாக்ஸ்களில் எட்டு பெண்கள், 1 ஆண் என ஒன்பது சிதைந்த உடல்கள், அதனுடன் உடைந்த 240 மனித எலும்புகளும் போலீசாரால் கண்டேடுக்கப்பட்டன. 15 முதல் 26 வயதுக்கு உட்பட்ட நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.  அதன் ஆதாரங்களை மறைக்க கேட் லிட்டர் எனப்படும் திரவம் தெளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து ஜப்பான் போலீஸ் அந்த நபரை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

டகாஹிரோ ஷிராஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. ஆனால் அதனை அந்த நபர் ஏற்பதாக இல்லை. இதனால் ஜப்பான் போலீஸ் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த நபருக்கு உண்மைகளைக் கண்டறிய டோக்கியோ போலீஸ் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

இதன் பிறகு உளவியல் சோதனையில் எல்லா உண்மைகளையும் அந்த வெளிபடுத்தினார்.  இது தொடர்பாக டோக்கியோ போலீசார் கூறுகையில், ''தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களோடு பேசி மனப்பான்மை புரிந்து ட்விட்டரில் இன்பாக்ஸ் வழியாக தொடர்பை ஏற்படுத்தி நட்பை வளர்த்து தனக்கு தற்கொலை செய்துகொள்வது தான் எண்ணம் என டகாஹிரோ நம்பவைப்பார். 

பின்னர், அந்த குறிப்பிட்ட நபர்களை நேரில் சந்திக்க அழைத்து முதலில் அவர்களைக் கொன்றுவிடுவார்.'' என்று தெரிவித்துள்ளனர்.  தான் செய்த அத்தனைக் கொலைகளையும் டகாஹிரோ ஷிராஷி ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய உள்ளூர் செய்தி நிறுவனம் ஜிஜி பிரஸ் ஏஜென்ஸி தெரிவிக்கிறது.

இதனை அடுத்து இந்த நூதன சமூக வலைத்தள கொலையாளி குறித்தும் இது போல இருப்பவர்களிடமும் கவனமாக கையாள செயல்பட ஜப்பான் சைபர் போலீசார் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்த நூதன கொலைச் சம்பவம் ஜப்பான் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. டகாஹிரோ ஷிராஷி உளவியல் ஆலோசகர்கள் கண்காணிப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP