ரோஹிங்கியாக்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர்- வங்கதேச அமைச்சர்

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கானப் பணி விரைவில் தொடங்கும்.
 | 

ரோஹிங்கியாக்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர்- வங்கதேச அமைச்சர்


வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கானப் பணி விரைவில் தொடங்கும் என வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தொடர் வன்முறைகளாலும், மியான்மர் ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவும் 8 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்மக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்பும் வகையில் இருநாடுகளுக்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

“வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பும் பணிக் கூடிய விரைவில் தொடங்கும். எந்த அகதிகள் நெருக்கடியாக இருந்தாலும் அது பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால் அகதிகள் விவகாரத்தில் வங்கதேசம் வெற்றிக் கண்டுள்ளது” என ஹசனுல் ஹக் இனு கூறியுள்ளார். அதே சமயம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது பற்றிய கால எல்லை குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

வங்கதேசத்திலிருந்து அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பத்திரிகையாளர்கள் வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனுவிடம் எழுப்பிய கேள்விக்கு, “இந்தியாவை நோக்கி கட்டாய இடப்பெயர்வு நடக்கும் வகையில், வங்கதேச எல்லையோர மாவட்டங்களில் எந்த பெரிய வன்முறையும் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவில்லை. உறவினர்கள் என்ற ரீதியிலும் இந்திய எல்லைப்பகுதியோடு எந்த தொடர்பும் கிடையாது” என்றார். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு முழுமையாக வெளியிடப்படும் வேளையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக சொல்லப்படுபவர்கள் வங்கதேசத்திற்கு நாடுகடத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP